எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதி உணவகங்களில் பல்கலை. நிர்வாகி திடீர் சோதனை!

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில் உள்ள ராணி சீதை ஆச்சி விடுதி உணவகத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் இன்று சென்று திடீர் ஆய்வு

News image
Updated On :29 ஆகஸ்ட் 2013, 9:08 am

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதி உணவகங்களை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில் உள்ள ராணி சீதை ஆச்சி விடுதி உணவகத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் இன்று சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவகத்தில் உள்ள சமையலறை வெளியே உள்ள கழிவுநீர் குட்டையை ஐந்து தினங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பல்கலைக்கழக பணிப்பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சமையலறையில் தயாரிக்கப்பட்டுள்ள உணவு தரமாக உள்ளதா? என சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கியுள்ள உணவு பட்டியல்படி வாரம் முழுவதும் மூன்று வேளையும் தரமான உணவினை மாணவர்களுக்கு வழங்குமாறும், சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என உணவுவிடுதி ஒப்பந்தக்காரரிடம் அறிவுறுத்தினார். பின்னர் பொறியியல் புல வளாகத்தில் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேநீர் விடுதியினை பார்வையிட்டு தரமான சமோசா, தேநீர், காபி மற்றும் உணவு பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது பதிவாளர் (பொறுப்பு) ந.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அலுவலர் டி.கிருஸ்துராஜ் மற்றும் விடுதி வார்டன் ஆகியோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.