எனது தலைமையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் தலைவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒழுங்கு தவறாமல் கட்டுப்பாடாக குருபூஜைக்கு சென்று வருவார்கள். ஆனால் கடந்த ஆண்டு அமைதியாக குருபூஜைக்கு சென்று திரும்பிய ஒரு வேனின் மீது பெட்ரோல் குண்டு வீசி தேவரின இளைஞர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரை ஒரு கும்பல் பறித்தது. இதனை காரணமாக கொண்டு காவல்துறையினர் வாடகை கார்களில் வரக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளனர்.மேலும் மும்பை, தில்லி, கல்கத்தா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும், பர்மா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் வருவோர் விமான நிலையத்திலிருந்து பசும்பொன்னுக்கும் வாடகை வாகனங்களில்தான் வர இயலும். எனவே இந்த நிபந்தனை மக்கள் அஞ்சலி செலுத்துவதை தடுக்கும் நோக்கமாகும். பிற மாவட்டத்தினர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் வரக்கூடாது என்ற நிபந்தனையும், மற்ற மாவட்டங்களிலிருந்து அஞ்சலி செலுத்தும் வரும் மக்களை தடுப்பதாகும்.