சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் குறுந்தகவல் மூலம் மாணவர்கள் குறை தீர்க்கும் சேவை பிரிவினை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
மேலும் அவர் நிர்வாகக் கட்டடத்தில் மாணவர்கள் அனுமதி சேர்க்கை, தேர்வுகள் மற்றும் இதர விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இரு தனி சிறப்பு சேவை பிரிவினையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி, புல முதல்வர்கள் டாக்டர் என்.சிதம்பரம் (மருத்துவம்), டி.வேலுசாமி (பொறியியல்), ரவி டேவிட் ஆஸ்டின் (பல்மருத்துவம்), செல்வராஜ் (கலைப்புலம்), கதிரேசன் (வேளாண்மை), ரவீந்திரன் (விளையாட்டுத்துறை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா செய்தியாளர்களிடையே தெரிவித்தது: மாணவர்கள் ராகிங், கல்வி, விடுதி மற்றும் பல்கலைக்கழக தொடர்புடைய குறை மற்றும் புகாரினை குறுந்தகவல் மூலம் எனது கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் இந்த சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. புகார் செய்யும் மாணவர்களின் பெயர் மற்றும் செல்போன் எண் ரகசியமாக வைக்கப்படும். புகார் அனுப்ப வேண்டிய செல்போன் எண்கள்: 94869 27780, 96004 88999.
தனி சிறப்பு பிரிவிற்கான பணிகளை மேற்கொள்ள பேராசிரியர் ராஜேந்திரன் ஆலோசகராகவும், 3 தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணாமலைப் பல்கலை தொலைதூரக்கல்வி மையத்தில் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் 16 ஆயிரம் பேர் அனுமதி சேர்க்கை செய்தனர். இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் 23 ஆயிரம் பேர் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர். அனுமதி சேர்க்கைக்கு கடைசி தேதி 30-9-2013 ஆகும் என ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


.jpg?w=1200&auto=format%2Ccompress&fit=max)