எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அத்தியாவசிய பொருள்களை இறக்குவதற்கு ஒத்துழைப்பது அளிப்பதில்லை: நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் முடிவு

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்குத்துறை குடோன்களில் இருந்து நியாயவிலைக்கடைகளுக்கு மூட்டைகளை இறக்கும்போது எடை குறைவாக உள்ளது. எனவே அக்.1-ம் தேதி முதல்

News image
Updated On :31 ஆகஸ்ட் 2013, 10:38 am

G.Sundararaj

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்குத்துறை குடோன்களில் இருந்து நியாயவிலைக்கடைகளுக்கு மூட்டைகளை இறக்கும்போது எடை குறைவாக உள்ளது. எனவே அக்.1-ம் தேதி முதல் நியாயவிலைக்கடைகளில் பொருள்களை சரியான எடை போட்டு வழங்கவில்லை என்றால் பொருள்களை கடைகளில் இறக்குவதற்கு ஒத்துழைப்பு அளிக்கப் போவதில்லை என தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் துரை.சேகர் தலைமை வகித்தார். வி.முத்துபாபு, சுகுமார், கே.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ஜி.ஜெயச்சந்திரராஜா கோரிக்கைகள் குறித்தும், போராட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கவுரையாற்றினார். அரசுப்பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் வி.குணசேகரன், மாநில துணைப் பொறுப்பாளர் பெ.நல்லதம்பி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்.தேவராஜ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் செப்டம்பர் முதல் வாரத்தில் கடலூர் மாவட்டத்திற்கு ஆய்விற்கு வரும் போது நியாயவிலைக் கடை பணியாளர்கள் அனைவரும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது; செப்.6-ம் தேதி பொதுக்குழுவை கூட்டுவது; 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.13-ம் தேதி மாநில அளவில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது; நியாயவிலைக் கடைகளில் விலையில்லா அரிசி வழங்குவதை 60 சதவீதம் மற்றும் 70 சதவீதம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவை தவிர்த்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.