எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரத்தில் மனைவி நல வேட்பு நாள்: 43 தம்பதியினர் பங்கேற்பு

சிதம்ரரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் வேதாத்திரி மகரிஷி வழிகாட்டுதலின் பேரில் சிவசக்திநகர் அறிவுத் திருக்கோயில் வளாகத்தில் மனைவி நல வேட்புநாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை

News image
Updated On :31 ஆகஸ்ட் 2013, 1:36 pm

G.Sundararaj

சிதம்ரரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் வேதாத்திரி மகரிஷி வழிகாட்டுதலின் பேரில் சிவசக்திநகர் அறிவுத் திருக்கோயில் வளாகத்தில் மனைவி நல வேட்புநாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 43 தம்பதியினர் பங்கேற்றனர். கணவன், மனைவி இருவரும் கைகோர்த்து, ஒருவரை, ஒருவர் பார்த்துக்கொள்ளும் உணர்வுகள் பரிமாற்ற தியானம் நடைபெற்றது. பின்னர் கணவன் மனைவிக்கு பூவும், மனைவி கணவனுக்கு பழமும் வழங்கி தங்களது உணர்வுகளையும், மகிழ்ச்சியான வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் ரா.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். க.தமிழ்ச்செல்வன் வரவேற்றார். பேராசிரியர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி மகளிருக்கான கட்டுரை தொகுப்பு மலரினை வெளியிட்டுப் பேசினார். அவர் பேசுகையில் தம்பதியினர் இனக்கமாக வாழும் வழியும், விட்டுகொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாகம் ஆகியவற்றை பின்பற்றி குடும்ப அமைதியை உருவாக்கி கொள்ளும் ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வழக்குரைஞர் என்.சேதுராமன், தமிழாசிரியை ஜி.சுந்தரி ஆகியோர் மதிப்பீட்டு உரையாற்றினர். அருள்நிதி ராஜசேகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை ச.சீனுவாசன் தொகுத்து வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.