சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேர் வெள்ளோட்டம்!
சிதம்பரம் பெரியார்தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேர் பழுதடைந்து பல வருடங்களாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இதுகுறித்து தினமணியில் ஜனவரி 31-ம் தேதி பழுதடைந்த தேர்


சிதம்பரம் பெரியார்தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேர் ரூ.4 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.
சிதம்பரம் பெரியார்தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேர் பழுதடைந்து பல வருடங்களாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இதுகுறித்து தினமணியில் ஜனவரி 31-ம் தேதி பழுதடைந்த தேர் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தோம். அதனடிப்படையில் பொதுமக்களின் சீரிய முயற்சியில் திருச்சி பெல் நிறுவனம் ரூ 1.86 லட்சம் செலவில் புதிய தேர் சக்கரங்களை தயாரித்து வழங்கியது. மேலும் பக்தர்கள் அளித்த நன்கொடை உள்பட மொத்தம் ரூ 4லட்சம் செலவில் தேர்சக்கரம் மற்றும் மரவேலைகள் செய்யப்பட்டு தேர் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூத்தாடும் பிளையார் கோயில் 10 நாள்கள் உற்சவம் ஆக.31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்க புதிய தேருக்கு பூஜை செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. திரளானோர் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். செப்.8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் விமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை டி.சுந்தரமூர்த்தி குருக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...