எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: கடலூர் மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இலங்கையிலிருந்து படகு மூலம் தீவிரவாதிகள் தமிழகத்தில் கடல்வழியாக ஊடுருவி சதிச்செயலலில் ஈடுபட உள்ளதாக உளவுத்துறையினர் 2வது முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து தமிழக

News image
Updated On :31 ஆகஸ்ட் 2013, 12:18 pm

G.Sundararaj

தீவிரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து படகு மூலம் தீவிரவாதிகள் தமிழகத்தில் கடல்வழியாக ஊடுருவி சதிச்செயலலில் ஈடுபட உள்ளதாக உளவுத்துறையினர் 2வது முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து தமிழக முழுவதும் கடலோர காவல் படையினர், கியு பிரிவு போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பெரியகுப்பம், தா.சோ.பேட்டை, சாமியார்பேட்டை, முடசல்ஓடை, கிள்ளை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் இரவு, பகலாக கடலோர காவல்படையினர் மற்றும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் படகு மூலம், கடற்கரையோரமும் கடலோர காவல் படையினரும், போலீஸாரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோர கிராமத்திற்கு படகு மூலம் யாராவது புதிய நபர்கள் வந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அடையாள அட்டையை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும் என போலீஸார் பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.