எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வீராணம் ஏரியில் மீன்குஞ்சுகளை பராமரிக்கவும், பிடிக்கவும் மோட்டார் படகு

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியில் மீன்குஞ்சுகளை பராமரிக்கவும், மீன்களை பிடிக்கவும் மீன்வளத்துறை மூலம் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு மோட்டார் படகு வழங்கப்பட்டுள்ளது. புதிய

News image
Updated On :31 ஆகஸ்ட் 2013, 10:13 am

G.Sundararaj

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியில் மீன்குஞ்சுகளை பராமரிக்கவும், மீன்களை பிடிக்கவும் மீன்வளத்துறை மூலம் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு மோட்டார் படகு வழங்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் படகு வெள்ளோட்டம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம்ஏரி மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் 44,856 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. மேலும் ஏரியிலிருந்து தினமும் சென்னை குடிநீர் வாரியத்திற்கு விநாடிக்கு 71 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது ஏரியில் நீர்மட்டம் 46.50 ஐ எட்டியுள்ளது. ஏரியில் ஆண்டு தோறும் மீன்வளத்துறை மூலம் பல லட்சம் மீன்குஞ்சுகள் விடப்படுகிறது. மீன்வளத்துறை மூலம் பதிவு செய்யப்பட்ட சுமார் 600 தொழிலாளர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சாதாரண படகில் சென்று மீன்கள் பிடிப்பதும், சிலர் திருட்டுதனமாக மீன்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் மீன்பிடித் தொழிலாளர் தங்களுக்கு மோட்டார் படகு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு மீன்வளத்துறை மூலம் ரூ.4.5 லட்சம் மதிப்பிலான மோட்டார் படகு வழங்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் படகு வெள்ளோட்டம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை வீராணம்ஏரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், மீன்வளத்துறை ஆய்வாளர் அஞ்சனாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.