குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பெரியகுப்பம், தா.சோ.பேட்டை, சாமியார்பேட்டை, முடசல்ஓடை, கிள்ளை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் இரவு, பகலாக கடலோர காவல்படையினர் மற்றும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் படகு மூலம், கடற்கரையோரமும் கடலோர காவல் படையினரும், போலீஸாரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோர கிராமத்திற்கு படகு மூலம் யாராவது புதிய நபர்கள் வந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அடையாள அட்டையை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும் என போலீஸார் பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.