அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பயங்கரவாத வழக்குகளை தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை செய்ய வேண்டும்: ராம.கோபாலன்

பயங்கரவாத வழக்குகளை தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தெரிவித்தார்.

News image
Updated On :5 டிசம்பர் 2013, 10:24 am

பயங்கரவாத வழக்குகளை தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தெரிவித்தார்.

விருதுநகரி்ல் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் வந்தார்.

பின்னர் அவர் தனியார் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,

மத்திய அரசு மதக் கலவர தடுப்பு மசோதாவைக் கொண்டுவரக் கூடாது. இதைக் கொண்டு வந்தால் மாநில அளவில் பிரச்னைகள் ஏற்படும். ஏற்கெனவே இம்மசோதாவைக் கொணடு வருவதற்கு தமிழக முதல்வரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

பயங்கவாத தடுப்புச் சட்டத்தை கொண்டு வரவேண்டும். இதில், ஏற்கனவே உள்ள சட்டப் பிரிவுகளை விரிவாக செயல்படுத்தினாலே பயங்கரவாதத்தை தடுக்க முடியும். மேலும், பிலால்மாலிக், பக்ருதின் ஆகியோர் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் என்பதால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற பயங்கரவாத வழக்குகளை தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை செய்ய வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் நிறைய சர்ச்சுகள் நிதி உதவி பெற்று அமைக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலான இடங்களில் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற சர்ச்களை அகற்ற வேண்டும். ஏற்கனவே சிவகாசி, விருதுநகர் அருகே முதலிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் முறைகேடாகக் கட்டப்பட்டுள்ள சர்ச்களை அகற்றுவதற்கு ஆதிதிராவிட வட்டாட்சியர் உத்தரவிட்டும், இதுவரையில் அகற்றப்படாமலே உள்ளன. இம்மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இதை தவிர்ப்பதற்கு தமிழகத்தில் ஓடும் முக்கிய பெரிய அளவிலான 16 ஆறுகளை இணைத்தாலே போதும். குடிநீர் பிரச்னையே இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் செயல்படுத்துவதற்கு மாநில அரசு முன்வரவேண்டும்.

டிச.6ம் தேதி மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இச்செயலை கண்டித்து 17 இடங்களில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

விருதுநகர் அருகே மூவரைவென்றான் கிராமத்தில் உள்ள மலை கொழுந்தீஸ்வரர் ஆலயத்தை பாரமரித்து ஆன்மிகத் தலம் ஆக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி இந்துக்களின் முக்கியத் திருவிழாவாக இருக்கிறது. அப்போது, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி இடது சாரிகள் பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும் என்கின்றனர். சைனா பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் மாசுபடுவதால், அதன் வரத்தை மத்திய அரசு  தடுக்க வேண்டும். இப்பகுதி தொழிற்சாலையில் குறைந்த சத்தத்துடன் வெடிக்கக் கூடிய வேதி பொருள்கள் கலந்து தயார் செய்யவும் வேண்டும்.

தற்போது, நடந்து முடிந்த தேர்தல்களில் மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜ.க முன்னணியில் உள்ளது. இந்தியாவின் நல்லதொரு பிரதமராக நரேந்திர மோடி இருப்பார். இப்பதவிக்கு பொருத்தமாகவும் இருப்பார் என்பதால் இளைஞர்களும் விரும்புகின்றனர் என்றார் ராம.கோபாலன்.        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.