பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

அருப்புக்கோட்டையில் இளம் பெண் பலாத்காரம்

அருப்புக்கோட்டை வேல்முருகன் காலணியைச்சேர்ந்தவர் ரத்தினசாமி என்பவரது மகள் பாண்டியம்மாள் வயது 16. இவர் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைக்குச்சென்று வருகிறார்.

News image
Updated On :8 டிசம்பர் 2013, 11:30 am

பாரதிசெல்வன்

அருப்புக்கோட்டை வேல்முருகன் காலணியைச்சேர்ந்தவர் ரத்தினசாமி என்பவரது மகள் பாண்டியம்மாள் வயது 16. இவர் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைக்குச்சென்று வருகிறார். தினசரி இரவு பணி முடிந்ததும் இவரைப் பாதுகாப்பாக கடை நிர்வாகத்தினர் கொண்டு சென்று பாண்டியம்மாளின் வீட்டருகே உள்ள காலணியில் இறக்கி விட்டு விடுவராம்.

சம்பவத்தன்றும் இரவில் காலணியில் இறக்கி விடப்பட்ட பாண்டியம்மாளை  அதே பகுதியைச்சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சந்திர மோகன் (23) என்பவர் மறைந்திருந்து பாண்டியம்மாளைக்கடத்திச்சென்று பலாத்காரம் செய்து விட்டார்.பாண்டியம்மாளின் தந்தை  அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் படி காவல்துறையினர் சந்திர மோகனைக்கைது செய்து விசாரித்து வருகின்றனர்.அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பணி காலியாக உள்ளது.எனவே நகர காவல் ஆய்வாளர் கே.கே.பாலச்சந்தர் வழக்கை விசாரித்து வருகிறார்.

அருப்புக்கோட்டையில் நடந்த இந்த துணிகரச்சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.