மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தமிழக அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

பொது மக்களின் துயரைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட

Updated On :14 டிசம்பர் 2013, 3:07 pm

பொது மக்களின் துயரைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக அரசின் செயல்பாட்டை மக்கள் ஏற்றுக் கொண்டதால்தான் ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.1991 முதல் 2013 வரை தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் அனைத்திலும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது.எதிர்க்கட்சியாக இருந்து இடைத்தேர்தலில் தோற்றால், "பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றது' என்பதும், ஆளும்கட்சியாக இருந்தால் "மக்கள் ஆதரவால் வெற்றி பெற்றோம்' என்பதும் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் வழக்கமாகிவிட்டது.

இரு கட்சிகளுமே ஆட்சிக்கு வந்தால், மக்கள் பிரச்னைகளை கவனிக்காமல் ஒருவர் மீது ஒருவர் குறை கூறுவதிலேயே குறியாக உள்ளனர்.இவற்றையெல்லாம் தமிழக மக்கள் உற்றுநோக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது மௌனப் புரட்சிதான் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை நினைவில் கொண்டு, வளர்ச்சிப் பணிகளை தமிழக அரசு முடுக்கி விட வேண்டும். விலைவாசியைக் கட்டுப்படுத்தி, மின்வெட்டை அகற்றி, சட்டம் - ஒழுங்கை செம்மையாக்கி மக்கள் துயரை துடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.