ஒற்றையானையால் விவசாயிகள் அச்சம். வீடுகள் சேதம்
பழனியை அடுத்த மேற்குமலைத் தொடர்ச்சி பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக ஏராளமான வனவிலங்குகள் தரைப்பகுதிக்கு குடிநீர், உணவு தேடி வந்துள்ளது. இவை விளைநிலங்கள், தோப்புகளில்


பழனி மேற்குமலைத்தொடர்ச்சி அடிவாரத்தில் சுற்றிவரும் ஒற்றை யானையால் விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
பழனியை அடுத்த மேற்குமலைத் தொடர்ச்சி பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக ஏராளமான வனவிலங்குகள் தரைப்பகுதிக்கு குடிநீர், உணவு தேடி வந்துள்ளது. இவை விளைநிலங்கள், தோப்புகளில் சர்வசாதாரணமாக நுழைந்து பயிர்சேதம் ஏற்படுத்தி வருகிறது. இவற்றை தடுக்க வனத்துறை அகழி, சோலார்வேலி என பல்வேறு ஏற்பாடுகள் செய்தும் அவை நுழைவது தடுக்க முடியாததாக உள்ளது. கூட்டமாக திரியும் யானைக்கூட்டத்தை கட்டுப்படுத்திவிட முடியும் நிலையில் தற்போது ஒற்றையானையாக சுற்றித்திரியும் யானை விவசாயிகள் பெரும் அச்சத்துக்கு ஆளாக்கியுள்ளது.
சுமார் 25 வயதாகும் இந்த யானை கொம்புடன் உள்ளது. பழனியை அடுத்த பொருந்தல், புளியம்பட்டி, ஆண்டிபட்டி, வரதமாநதி, புளியமரத்துசெட் என பல பகுதிக்கும் நள்ளிரவில் மக்கள் செல்லும் சாலையிலேயே செல்லும் இந்த யானை மக்களின் அச்சுறுத்தலுக்கு பயப்படுவதில்லை. எதிர்த்து வரும் இந்த யானை விவசாய நிலங்களில் பயிர்சேதம் செய்வதோடு மட்டுமன்றி தோட்டங்களில் உள்ள சாலைகளை பிரித்து வீசிவிடுகிறது. இதனால் இரவுநேரங்களில் விவசாய நிலங்களுக்கு பாதுகாப்புக்கு செல்வதை கூட விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு பழனியை அடுத்த புளியமரத்துசெட் பகுதியில் வரதமாநதி அண்ணாநகரை சேர்ந்த மாரியப்பன், ராமசாமி ஆகியோர் தோட்டத்து வீட்டின் கூரை ஓட்டையும், குடிசையையும் ஒற்றையானை பிரித்து எரிந்தது. மேலும், கரும்பு தோட்டம், தென்னை மரங்களையும் சேதம் செய்தது. பழனி வனத்துறையினரும், ஒட்டன்சத்திரம் வனத்துறையினரும் இணைந்து மலையடிவாரத்தில் திரியும் யானைக்கூட்டத்தை வனப்பகுதிக்குள் அனுப்பவும், அவற்றுக்கு வேண்டிய தண்ணீர் வசதிகளை செய்து தரவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...