தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஊர் கட்டுப்பாட்டை தளர்த்த தலித் மக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் அருகே தலித் மக்கள் மீது விதிக்கப்பட்ட ஊர் கட்டுப்பாட்டை தளர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.

News image
Updated On :16 டிசம்பர் 2013, 10:37 am

ராதாகிருஷ்ணன்

தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் அருகே தலித் மக்கள் மீது விதிக்கப்பட்ட ஊர் கட்டுப்பாட்டை தளர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் அருகே உள்ளது கொண்டாம்பட்டி தலித் காலனி. இந்த பகுதியில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டதன் விளைவாக கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி கொண்டாம்பட்டி காலனி தாக்குதலுக்குள்ளானது.இதைத் தொடர்ந்து, தற்போது எங்கள் கிராம மக்கள் மீது மற்றொரு சமூகத்தினர் ஊர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இதனால், எங்களுக்கு அந்த பகுதியில் கடைகளில் மளிகை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுவதில்லை. மேலும், கால்நடைகளுக்கு தவிடு விற்பனை செய்யப்படுவதில்லை. இது போல பல்வேறு கட்டுப்பாடுகள் எங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் இன்னல்களுக்கு உள்ளாகிறோம்.எனவே, தலித் மக்கள் மீது விதிக்கப்பட்டு ஊர் கட்டுப்பாட்டை தளர்த்தி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.