தேனிமாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் 13 வது வார்டில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் 18 வார்டுகள் உள்ளன.
இப்பகுதிகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.13 வது வார்டில் ஆதிதிராவிடர் காலனி,முனியாண்டி கோவில் தெரு பகுதிகள் உள்ளது.இந்த வார்டில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிதண்ணீர் வழங்க வில்லை. மேலும் குடிநீருக்காக அருகில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியின் மூலம் விநியோகிக்கப்படும் உப்பு தண்ணீரை குடிநீராக பயண்படுத்தி வந்தனர்.இந்நிலையில் இத் தொட்டியின் மோட்டார் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பழுதடைந்துவிட்டது.
இது குறித்து 13 வது வார்டு உறுப்பினர் மற்றும் பேரூராட்சி தலைவர், நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு பல முறை புகார் செய்தும்.இது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.இதனையடுத்து ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தை 13 வது வார்டை சேர்ந்த 50-க்கு மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி எஸ்.ஐ. பாண்டியம்மாள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நந்தினி கூறியது:
கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் விநியோகம் செய்யவில்லை.இது குறித்து எங்கள் பகுதி உறுப்பினர்,பேரூராட்சி தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டோம்.இப்போதும் கூட பேரூராட்சி தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி அலுவகத்தில் இருந்தும் எங்களிடம் வந்து எவ்வித பதிலும் கூறவில்லை.அதற்கு பதிலாக காவல்துறையினரை வைத்து பேசவைக்கின்றனர் என்றார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

