பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில் ஊர்க்கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் புதன்கிழமை திருவாதிரை


பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் புதன்கிழமை திருவாதிரையை முன்னிட்டு நடராஜர் அபிஷேகம், ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில் ஊர்க்கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் புதன்கிழமை திருவாதிரை விழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை அம்மன் பொன்னூஞ்சல் நடத்தப்பட்டது. புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேதர் நடராஜருக்கு சன்னதி முன்பு சிறப்பு மேடை அமைக்கப்பட்டு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன், பழவகைகள் கொண்டு சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் காசுமாலை, உத்திராட்சமாலை, வண்ணமலர் மாலைகள், பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டது. பின் சுவாமிக்கு யாகசாலையில் இருந்து ரட்சை பெறப்பட்டு வைக்கப்பட்டு சோடஷ உபச்சாரம் நடைபெற்றது. மஹா தீபாராதனை முடிந்த பின்னர் சுவாமி நான்கு ரத வீதிகளில் யானை முன்னே செல்ல வீதிஉலா எழுந்தருளினார்.
வடக்கு ரத வீதியில் வைரவன் கோயில் அருகே ஊடல்விழா நடைபெற்றது. நடராஜர் வேறு பெண்ணை நோக்கிய காரணத்தால் அம்மன் கோபமுற்று கோயிலுக்கு சென்று நடையை அடைத்துக் கொண்டார். அருள்மிகு நடராஜர் களிநடனம் புரிந்து ருத்ரதாண்டவம் ஆடிவிட்டு கோயிலுக்கு தனியே திரும்பியபோது கோயில் நடை அடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுந்தரர் பெருமானை அம்மனிடம் சமாதானத்தூது அனுப்பி, அம்மன் சமாதானமுற்று நடை திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நடராஜர் களிநடனம், ஊடல் காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். பின்னர் தம்பதி சமேதராக நடராஜர் கோயிலின் உட்பிரகாரம் எழுந்தருள சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ரட்சை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் பேஷ்கார்கள் நாராயணன், ராமலிங்கம், மணியம் சேகர், காண்ட்ராக்டர் நேரு, புஷ்பகைங்கர்ய சபா மருதசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...