யானைகள் புத்துணர்வு முகாமுக்கு புறப்பட்டது பழனிக்கோயில் யானை கஸ்தூரி
பழனிக்கோயில் யானை கஸ்தூரி புதன்கிழமை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடைபெறும் கோயில் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாமுக்கு கிளம்பி சென்றது.


பழனிக்கோயில் யானை கஸ்தூரி புதன்கிழமை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடைபெறும் கோயில் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாமுக்கு கிளம்பி சென்றது.
தமிழக அரசு கோயில் யானைகளுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வனபத்ரகாளியம்மன் கோயில் பவானி ஆற்றுப்படுகையில் கோயில் யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு முகாமை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமில் தமிழகம் மட்டுமன்றி புதுச்சேரி உள்பட பல பகுதிகளில் இருந்து கோயில்யானைகள் பங்கேற்க உள்ளது. இந்த யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் இன்று(டிச.19) முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக பழனிக்கோயில் யானை கஸ்தூரி புதன்கிழமை லாரி மூலமாக முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த பல்வேறு யானை முகாம்களில் பழனிக்கோயில் யானை பராமரிப்புக்காக பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 47 வயதாகும் கஸ்தூரி யானையின் எடை 4,975 கிலோ ஆகும்.பழனி புதுதாராபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல்படை முகாமில் உள்ள மேடையில் ஏற்றப்பட்ட யானை அருகே நிறுத்தப்பட்ட லாரிக்கு இலகுவாக கொண்டு செல்லப்பட்டது. லாரியின் பக்கவாட்டு பகுதியில் வைக்கோல் போர்கள் மெத்தை போல அமைக்கப்பட்டிருந்தது. லாரியில் கஸ்தூரி ஏறியபின்பு லாரிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம் கொடியசைக்க லாரி புறப்பட்டு சென்றது. வழிநெடுக ஏராளமானோர் நின்று யானைக்கு கையசைத்து வழியனுப்பினர்.
பழனி கால்நடை மருத்துவத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் கூறுகையில், யானை கஸ்தூரிக்கு ஆந்த்ராக்ஸ், கோமாரி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் வயிற்றில் குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. லாரியில் செல்லும் பொருட்டு கடந்த மூன்று நாட்களாக பயிற்சி பெற்றுள்ளது. அதற்கான அனைத்து தகுதிகளுடன் சிறப்பாகவே யானை உள்ளது என்றார். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனிக்கோயில் தைப்பூசத் திருவிழா விரைவில் துவங்கவுள்ளதால் ஜன.17ம் தேதி தைப்பூசத்தேரோட்டத்துக்கு கோயில்யானை தேரை தள்ளியபின்பே பக்தர்கள் இழுப்பது மரபு. இந்நிலையில் முகாமில் பங்கேற்கும் பழனிக்கோயில் யானை தைப்பூசத்துக்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என பலரும் இணை ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பழனி மோட்டார் போக்குவரத்து வாகன ஆய்வாளர் பாலமுருகன், பாரஸ்ட்டர் தாருகாவனன், கால்நடைத்துறை மருத்துவர் சக்திவேல்பாண்டியன், திருப்பூர் லாட்ஜ் மகேஷ், திருக்கோயில் மேலாளர் ரவி, கண்காணிப்பாளர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...