நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஈரோடு-பழனி ரயில்பாதை கோரி நீதிமன்றத்திற்கு செல்ல முடிவு: ரயில்வே மக்கள் நலச்சங்க தலைவர் ஜெயிலானி

பழனி முதல் ஈரோடு வரையிலான ரயில்பாதை திட்டத்தை கைவிடக்கூடாது என வலியுறுத்தி நீதிமன்றத்துக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக ஈரோடு-பழனி ரயில்வே மக்கள் நலச்சங்க தலைவர்

News image
Updated On :20 டிசம்பர் 2013, 12:22 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி முதல் ஈரோடு வரையிலான ரயில்பாதை திட்டத்தை கைவிடக்கூடாது என வலியுறுத்தி நீதிமன்றத்துக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக ஈரோடு-பழனி ரயில்வே மக்கள் நலச்சங்க தலைவர் ஜெயிலானி தெரிவித்துள்ளார்.

பழனி தாலுகா அலுவலகம் முன்பு பழனி-ஈரோடு ரயில்வே மக்கள் நலச்சங்கம் சார்பில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு சீர்வளர்சீர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமை வகித்தார்.  ஈரோடு தென்னக ரயில்வே மண்டல கமிட்டி ஆலோசனை குழு உறுப்பினர் கௌதமன், செவாலியர் குழந்தைசாமி ஆகியோர் போராட்டத்தை துவக்கி வைத்தனர்.  பொதுச்செயலாளர் லிங்கம் சின்னசாமி வரவேற்புரை வழங்கினார்.  செயலர் பழனிச்சாமி, தணிகாசலம், திருமலைசாமி, கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சிறப்புரை நிகழ்த்தினர். 

சங்க தலைவர் டாக்டர் ஜெயிலானி உண்ணாவிரத்தை நிறைவு செய்து உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், உலகிலேயே பொதுத்துறை நிறுவனமான ரயில்வேக்கு தனி பட்ஜெட் போடுவது இந்தியாவில்தான்.  நம்நாட்டில் எடுத்துசெல்லும் 80சதவீத பொருட்களில் 70சதவீதம் ரயில்கள் மூலமாகவே நடைபெறுகிறது. ரயில் போக்குவரத்து சார்ந்த இடங்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது.  ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் ரயில்பாதையில் தன்னிறைவு பெற்ற நிலையில் தமிழ்நாடு மிகவும் பின்தங்கி உள்ளது.  தமிழகத்தில் சுமார் 910 கி.மீ தூரம் மீட்டர்கேஜ் பாதைகளாக உள்ளது.  தமிழகத்துக்கு மட்டும் புதிய ரயில்பாதை திட்டத்துக்கு ஆறாயிரம் கோடி நிதி தேவைப்படும் நிலையில் 700கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ரயில்வே பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்து வருகிறது.  இதனால் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் அறிவிப்போடு நின்று விடுகிறது.  ஈரோடு-தாராபுரம்-பழனி ரயில்பாதை திட்டம் ஆங்கிலேயர் காலத்தில் தீட்டப்பட்ட திட்டமாகும்.  இதை நிறைவேற்ற மக்கள் நலச்சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது.  சொற்பநிதி ஒதுக்கப்பட்டு சர்வே நடைபெற்ற நிலையில் இந்த திட்டம் லாபகரமாக இருக்காது என ரயில்வே முடக்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.  ரயில்பாதை திட்டம் முடியுமுன்னே எதன் அடிப்படையில் லாபகரமாக இருக்காது என அறிவிப்பது எப்படி என தெரியவில்லை. மற்ற மண்டல ரயில்வேக்களை கணக்கிடும் போது தென்னக ரயில்வேயில்தசான் அதிக வருவாய் கிடைத்து வருகிறது. 

தெற்கு ரயில்வே பொது மேலாளர் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு மக்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.  ஆகவே, நியாயபூர்வமான கோரிக்கைக்காக நீதிமன்றத்தை நாடவுள்ளோம்.  இத்திட்டத்துக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்போம். மேலும், தனிக்குழு அமைத்து மத்தியரயில்வே அமைச்சரை சந்திக்கவுள்ளோம் என தெரிவித்தார்.

போராட்ட முடிவில் தமிழக அரசையும் இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்க கோரி கோரிக்கை விடுக்கவும், பாராளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும், திட்டத்தை பாராளுமன்ற தேர்தலுக்கு முன் மீண்டும் பரிசீலிப்பதாக அறிவிக்காவிட்டால்  மூன்று மாவட்ட மக்களிடம் வாக்களிக்க விரும்பவில்லை எனும் நோட்டாவை பதிவு செய்ய பிரச்சாரம் செய்யப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.