கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் காதை கடித்தவர் மீது வழக்குப் பதிவு
பழனி அருகே புளியம்பட்டி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபாகரன்(22). இவர் வத்தக்கவுண்டன்வலசை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். நீண்டகாலமாக பணம்


பழனி அருகே கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் காதை கடித்தவர் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பழனி அருகே புளியம்பட்டி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபாகரன்(22). இவர் வத்தக்கவுண்டன்வலசை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். நீண்டகாலமாக பணம் தராததால் பிரபாகரன் தந்தையிடம் சிவக்குமார் தெரிவித்தபோது விரைவில் பணத்தை திருப்பித்தருமாறு மகனிடம் அறிவுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புளியம்பட்டி டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த பிரபாகரனிடம் சிவக்குமார் நண்பர்களான புளியம்பட்டி வெட்டுக்காடு தோட்டத்தை சேர்ந்த வீரப்பகவுண்டர் மகன் செல்வக்குமார்(35) மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத வேலம்பட்டியை சேர்ந்தவர் என இருவர் பணத்தை திருப்பித்தரமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு பிரபாகரன் உங்களிடம் நான் பணம் வாங்கவில்லை என தெரிவிக்கவே செல்வக்குமார் பிரபாகரனின் இடது காதை கடித்து துப்பியுள்ளார். மற்றொருவர் கல்லால் அடித்துள்ளார். தொடர்ந்து இருவரும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காயமடைந்த பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீதும் கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...