ரயலில் ஏறி, ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த இரு குழந்தைகளை கிராம மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
அவர்களது பெற்றோரை வரவழைத்து குழந்தைகளை சனிக்கிழமை இரவு விசாரணைக்குப் பின்னர் ஒப்படைத்தனர். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள புளியம்பட்டி கிராமத்தில், ரயில்வே கிராஸிங்கிற்காக செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் ரயில் சனிக்கிழமை மாலை நின்றுள்ளது. இந்த ரயிலில் ஆர்வத்தில் இரண்டரை வயது மற்றும் மூன்றரை வயதுடைய இரு குழந்தைகள் ஏறியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் குழந்தைகள் இறங்கி நடந்து அத்திகுளம் கிராமத்திற்கு வந்துள்ளது. அங்கு குழந்தைகளைப் பார்த்தவர்கள் விசாரித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீஸார் இரு குழந்தைகளையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரித்ததில் புளியம்பட்டி வேல்சாமி மகன் மதிவாணன் (மூன்றரை) மற்றும் கருப்பசாமி மகன் லிங்கதுரை (இரண்டரை) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் புளியம்பட்டிக்கு பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர் இரவு வந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

