ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையை சீரமைக்கக் கோரி சாலைமறியல்: 62 பேர் கைது

விக்கிரவாண்டி- கும்பகோணம் சாலையை சீரமைக்கக் கோரி கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட 62 பேர்

Updated On :23 டிசம்பர் 2013, 10:47 am

விக்கிரவாண்டி- கும்பகோணம் சாலையை சீரமைக்கக் கோரி கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட 62 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மிக மோசமான நிலையில் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையை சீரமைக்கக் கோரி கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை அருகே மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மாதவன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.சதானந்தம் (புவனகிரி), பி.வாஞ்சிநாதன் (கீரப்பாளையம்), எஸ்.பிரகாஷ் (காட்டுமன்னார்கோயில்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வன் உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்ளிட்ட 62 பேரை சேத்தியாத்தோப்பு போலீஸார் கைது செய்தனர். இதனால் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.