மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலம் ராயலசீமா, அதையொட்டிய பகுதிகள் முதல் மன்னாா் வளைகுடா வரை தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தென்தமிழகம், மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஏப். 6) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஏப். 7, 8) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப். 9 முதல் ஏப். 11வரை லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
Summary
According to current meteorological reports for today, Monday, April 6, 2026, several districts in Tamil Nadu are seeing localized convective rainfall.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென் தமிழகம், வடக்கு கடலோரத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஏப். 10 வரை மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


