பழனி அருகே புளியம்பட்டியில் தனியார் நர்சரியில் பிடிபட்ட முள்எலி
பழனி அருகே புதுதாராபுரம் சாலையில் புளியம்பட்டி பகுதியில் அம்மா நர்சரி என்ற பெயரில் தனியார் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு நாய் தொடர்ந்து சத்தம்போடவே


பழனி அருகே தனியார் நர்சரி பண்ணையில் முள்எலி பிடிபட்டது.
பழனி அருகே புதுதாராபுரம் சாலையில் புளியம்பட்டி பகுதியில் அம்மா நர்சரி என்ற பெயரில் தனியார் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு நாய் தொடர்ந்து சத்தம்போடவே வெளியே வந்து பார்த்த போது பந்து போன்ற அமைப்பு பெரிதாகி பின் சிறிதாகிக் கொண்டே இருந்ததால் அதை பிளாஸ்டிக் டப்பாவில் பிடித்து வைத்து காலையில் பார்த்துள்ளனர். அப்போது அது முள்எலி என தெரியவந்தது. செம்மண் நிலங்களில் அதிக அளவில் வசிக்கும் முள்எலி மிகவும் மருத்துவகுணம் உள்ளதாகும்.
விளைநிலங்கள் பலவும் மனைகளாக மாறிவரும் நிலையில் பலரும் இதை இறைச்சியாகவும் உட்கொள்வதால் இந்த இனம் தற்போது அழிந்து வருகிறது. சாதுவான இப்பிராணி மனிதர்கள் நடமாட்டம் தென்பட்டாலோ அல்லது எதிரிகள் தாக்க வந்தாலோ உடலை பந்து போல சுருட்டிக் கொள்ளும். பின்னர் யாரும் இல்லாத போது உடலை வெளியே கொண்டு வந்து நடந்து செல்லும். இதை அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்க வன ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். நர்சரியில் பிடிபட்ட இந்த அரியவிலங்கு வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதை வனத்துறை அதிகாரிகள் கொடைக்கானல் மலையடிவாரப் பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறையினர் ஏற்பாடு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...