விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திட்டமிட்டபடி மலேசிய நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்பது உறுதி

வரும் 28ம் தேதி மலேசியாவில்  இசை நிகழச்சி நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக  இசைஞானி இளையராஜா நேற்று காலை ரிகர்சலில் ஈடுபட்டிருந்தார்.  இந்நிலையில்

News image
Updated On :24 டிசம்பர் 2013, 9:43 am

வேல்முருகன்

 வரும் 28ம் தேதி மலேசியாவில்  இசை நிகழச்சி நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக  இசைஞானி இளையராஜா நேற்று காலை ரிகர்சலில் ஈடுபட்டிருந்தார்.  இந்நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்..

அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.  இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அவர் மலேசிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் பரவியதால் மலேசிய ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்ததும், இளையராஜாவின் மகனும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர்ராஜா, மொபைல்போன் மூலம் இளையராஜாவை, மலேசிய பத்திரிகையாளர்களிடம் பேச வைத்தார். இளையராஜா பேசியதை, பத்திரிகையாளர்கள் அனைவரும் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர்களிடம் பேசிய இளையராஜா, 'திட்டமிட்டபடி, மலேசியாவில் வரும் 28ம் தேதி என்னுடைய இசை நிகழ்ச்சி நடக்கும். எனவே, ரசிகர்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம்,' என கூறியுள்ளார். இந்நிலையில் உடல்நிலை தேறியதால் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுவார்டுக்கு  இளையராஜா மாற்றப்பட்டுள்ளார். நாளை டிச்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.