விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நரேந்திர மோடியே பிரதமர் என்ற கோஷத்துடன் இந்தியா முழுவதும் பிரசாரம்: பாஜக

புது தில்லியில் இன்று பாஜ தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் அத்வானி, மோடி சுஷ்மா சுவராஜ்,  மற்றும் பாஜக முதல்வர்கள்  உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த

News image
Updated On :24 டிசம்பர் 2013, 10:27 am

வேல்முருகன்

புது தில்லியில் இன்று பாஜ தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் அத்வானி, மோடி, சுஷ்மா சுவராஜ்,  மற்றும் பாஜக முதல்வர்கள்  உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 2014 இல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் பிரசார முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கூட்டத்திற்கு  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  பாஜக பொதுச்செயலாளர் அனந்த குமார். மோடியே பிரதமர் என்ற கோஷத்துடன் இந்தியா முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் இதற்காக ரூபாய் 10 முதல் 1000 வரை நன்கொடை வசூலிக்கப்படும் என்றார். மேலும் நாடு முழுவதும் நடைபெறவுள்ள பிரசாரக்கூட்டத்தில் மோடி பங்கேற்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.