ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

நடராஜர் கோயில் தெற்குவாயிலை திறக்க கோரி முற்றுகை போராட்டம்: 37 பெண்கள் உள்ளிட்ட 199 பேர் கைது

சிதம்பரத்தில் நந்தனார் நுழைந்த ஸ்ரீநடராஜர் கோயில் தெற்குவாயிலை திறக்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த 37 பெண்கள் உள்ளிட்ட 199 பேரை நகர போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்

News image
Updated On :25 டிசம்பர் 2013, 6:17 am

சிதம்பரத்தில் நந்தனார் நுழைந்த ஸ்ரீநடராஜர் கோயில் தெற்குவாயிலை திறக்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த 37 பெண்கள் உள்ளிட்ட 199 பேரை நகர போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை திறக்கக் கோரி விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய இயக்கத்தினர் கருணாமூர்த்தி தலைமையில் தெற்குசன்னதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்தனர்.

அவர்களை சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் வழிமறித்து 37 பெண்கள் உள்ளிட்ட 199 பேரை கைது செய்தனர். தெற்கு சன்னதி அடைப்பு: முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு போலீஸார் தெற்குசன்னதி வழியை இரும்பு தடுப்புகளால் புதன்கிழமை காலை தடுத்து இரு சக்கர வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.

இதனால் தெற்குசன்னதியை வழியாக கோயிலுக்கு செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் தெற்கு சன்னதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.