ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

காட்டுமன்னார்கோயிலில் டிச.29-ல் கடலூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

கடலூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே முட்டத்தில் வருகிற டிச.29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது என மாவட்டச் செயலாளரும்,

Updated On :26 டிசம்பர் 2013, 12:12 pm

கடலூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே முட்டத்தில் வருகிற டிச.29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது என மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு தலைமை வகிக்கிறார். பிப்.15,16 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாடு குறித்தும், பிப்.12-ல் கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தருவது குறித்தும், விடுபட்ட கிளைகளுக்கு உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்தும், கட்சி ஆக்கப் பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

 எனவே செயற்குழுக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கட்சி நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்குமாறு என அறிக்கையில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.