சிதம்பரம் அருகே சுலோச்சனா நகரில் கிருஸ்துவ ஜீவமார்க்கம் சபை அடிக்கல் நாட்டுவதற்கு அப்பகுதி மக்களும், பாரதிய ஜனதா கட்சியினரும் வியாழக்கிழமை எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் சென்று சமரசம் செய்ததால் கலைந்து சென்றனர்.
சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள சுலோச்சனா நகரில் ஜீவமார்க்கம் ஏசிஏ கிருஸ்துவ சபை அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான விழா நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்பகுதி மக்களும், பாரதிய ஜனதா கட்சியினர் ஸ்ரீதரன், கணபதிராம், ஜோதிகுருவாயூரப்பன், ஊராட்சி மன்றத் தலைவர் வேணுகோபால் சம்பவ இடத்திற்கு சென்று இங்கு சபை கட்டப்படால் இப்பகுதியில் வசிக்கும் இந்து மக்களின் பொது அமைதி கெடும் எனவே சபை கட்ட அனுமதிக்க மாட்டோர் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், வட்டாட்சியர் எம்.விஜயா, இன்ஸ்பெக்டர்கள் பி.முருகானந்தம், உதயகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது அடிக்கல் நாட்டு விழாவிற்கு காவல்துறை வாரிய உறுப்பினர் மா.பிரகாஷ் வருவதால் எவ்வித பிரச்சனையும் செய்ய வேண்டாம். மேற்கொண்டு எவ்வித கட்டுமானப்ப பணியும் நடைபெறாது என உத்தரவாதம் அளித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்களும், பாஜகவினரும் கலைந்து சென்றனர். கிருஸ்துவ சபை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி!

3 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


