தலித் பெண் புகார் மீதான போலீஸ் விசாரணை திருப்தியில்லை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
தருமபுரி மாவட்டம், வேப்பமரத்தூர் தலித் பெண் புகாரின் மீதான போலீஸ் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என தேசிய தாழ்த்தப்பட்டோர்


தருமபுரி மாவட்டம், வேப்பமரத்தூர் தலித் பெண் புகாரின் மீதான போலீஸ் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.
பொம்மிடி அருகே வேப்பரமத்தூர் சேர்ந்தவர் தலித் பெண் சுதா. இவர் அதே பகுதியில் வசிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக வேப்பமரத்தூரைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினருக்கு சுதா குடும்பத்தினருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இது குறித்து டிச.5-ஆம் தேதி சுதா தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு புகார் மனு அளித்திருந்தார். இதன் மீது விசாரணை நடத்த வேண்டும் என ஆணையம் தருமபுரி மாவட்ட காவல்துறைக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், தலித் பெண் சுதா புகார் தொடர்பாக தருமபுரி மாவட்ட போலீஸார் நடத்திய விசாரணை மற்றும் மேற்கொண்ட நடவடிக்கையில் திருப்தியில்லை எனவும், இந்த புகார் தொடர்பாக முறையான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி ஆணையம், தருமபுரி மாவட்ட எஸ்பி ஆஸ்ராகர்க்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...