தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

நம்பர் பிளேட்டில் படங்கள், வாசகம் உள்ள வாகனங்களுக்கு அபராதம்

சிதம்பரம் நகரில் நம்பர் பிளேட்டில் படங்கள், வாசகங்கள் உள்ள மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து பிரிவு போலீஸார் பிடித்து அபராதம்

Updated On :26 டிசம்பர் 2013, 9:15 am

சிதம்பரம் நகரில் நம்பர் பிளேட்டில் படங்கள், வாசகங்கள் உள்ள மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து பிரிவு போலீஸார் பிடித்து அபராதம் விதித்தனர்.

சிதம்பரம் நகரில் நகர போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரா.மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆர்.ஞானசேகரன், தலைமைக்காவலர் சுதாகர் ஆகியோர் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட்டில் தலைவர் படங்கள், வாசகங்கள் எழுதி உள்ள மோட்டார் சைக்கிள்களை பிடித்து தலா ரூ.100 அபராதம் விதித்தனர். முதல் முறை பிடிக்கும் போது ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்படுவார்கள். நம்பர் பிளேட்டை மாற்றப்படாவிடில் இரண்டாவது முறை பிடிக்கும் போது ரூ.300 அபராதம் விதிக்கப்படும் என இன்ஸ்பெக்டர் ரா.மலைச்சாமி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.