பின்னர் பல்கலைக்கழக துறைத்தலைவர்கள் ஆர்.எம்.கதிரேசன் (வேளாண்மை), டாக்டர் என்.சிதம்பரம் (மருத்துவம்), ரவிடேவிட்ஆஸ்டின் (பல்மருத்துவம்), செல்வராஜ் (கலை), வேலுசாமி (பொறியியல்) உள்ளிட்டோர் அங்கு சென்று மாணவியர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி லாரி மூலம் உடனடியாக தண்ணீர் வழங்குவதாகவும், புதிய போர்வெல் அமைத்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணுவதாகவும் தெரிவித்தனர். தண்ணீர் வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறிய மாணவியர்களை வலுக்கட்டாயமாக கலைந்து செல்ல வைத்தனர். அதன் பின்னர் மாணவியர்கள் விடுதி முன்பு சாலையில் அமர்ந்தும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் விடுதிக்கு கொண்டு வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மாணவியர்கள் போராட்டத்தை கைவிட்டு விடுதிக்குள் சென்றனர்.