வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தீவிபத்து: ரூ.4 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் மற்றும் ரீசார்ஜ் கார்டுகள் எரிந்து சேதம்

சிதம்பரம் சபாநாயகர்தெருவில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான பி.எஸ்.எம்.கம்ப்யூட்டர் நிறுவனம் மற்றும் ஏர்டெல் செல்போன் ஏஜென்சி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின்

News image
Updated On :5 பிப்ரவரி 2013, 11:24 am

G.Sundararaj

சிதம்பரத்தில் இன்று அதிகாலை கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் மற்றும் ரீசார்ஜ் கார்டுகள் எரிந்து சேதமடைந்தன.

சிதம்பரம் சபாநாயகர்தெருவில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான பி.எஸ்.எம்.கம்ப்யூட்டர் நிறுவனம் மற்றும் ஏர்டெல் செல்போன் ஏஜென்சி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் மாடியில் இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீரென தீப்பிடித்துள்ளது. தகவல் அறிந்த சிதம்பரம் தீணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்தில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 6 கம்ப்யூட்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள், நாற்காலிகள், ரூ.2லட்சம் மதிப்புள்ள ஏர்டெல் செல்போன் ரீசார்ஜ், ஏர்டெல் டிடிஹெச் ரீசார்ஜ் உள்ளிட்டவை எரிந்து சேதமுற்றன. தீ விபத்து குறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.