சுதாவும், கௌதமும் உறவினர்கள் என்பதால், இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் சுதாவின் தந்தை முருகேசனுக்கு பிடிக்கவில்லை. இதனால் காதல் ஜோடிகள், தங்களது காதலுக்கு எதிர்ப்பு வருகிறது என்று தெரிந்தவுடன், கௌதம் தனது தந்தை முத்துசாமியிடம் திருமணம் செய்து வைக்குமாறு முறையிட்டுள்ளார். கோவையில் உள்ள முத்துசாமி தூத்துக்குடிக்கு வந்து முருகேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். ஆனால் முருகேசன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம்.இந்த விபரம் கௌதமுக்கு தெரியவரவே, தான் வேலை பார்க்கும் மில்லில் வைத்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். காதலன் இறந்ததில் மனம்முடைந்த சுதா வீட்டை விட்டு வெளியேறி, அருகில் உள்ள சண்முகபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாராம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.