சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு மகாபிஷேகம் மற்றும் அர்த்தசாம சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
தில்லைக்காளியம்மனு 140-வது அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிரம்மசாமுண்டி சந்நிதியில் நெய் தீப ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் தில்லைக்காளியம்மனுக்கு குடம், குடமாக நல்லெண்ணெய் அபிஷேகமும், தைலக்காப்பு, குங்குமகாப்பு ஆகியவை செய்யப்பட்டு, வாசனை திரவியம், வெண்பட்டு சாற்றி, வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் மகாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். பரமேஸ்வரி செல்வராஜ் விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொலைதூரக்கல்வி இயக்கக தொடர்பு அதிகாரி பாண்டியன், சிறப்பு அதிகாரி கிருஷ்ணகுமார், உதவி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செந்தில்வேலன், பேராசிரியர்கள் சின்னையன், அன்னை அறக்கட்டளை பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாம அபிஷேக மண்டலி நிர்வாகி எஸ்.வைத்தியநாதன் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


