சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த ஐயப்பன் (38). இவரது தனது மனைவி பிரசவத்திற்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு தங்கை பிரேமாவதியுடன் வந்துள்ளார். அப்போது புறநோயாளிகள் பிரேமாதவதி அண்ணன் குழந்தையை காண்பிப்பதற்காக டோக்கன் கொடுக்கும் இடத்தில் கியூ வரிசையில் நின்றுள்ளார். அப்போது குழந்தையை தான் வைத்துக் கொள்வதாக சீர்காழி தாலுக்கா மாதுரவேலூரைச் சேர்ந்த பவித்ரா (20) கூறி குழந்தை வாங்கிக் கொண்டார். குழந்தை கழுத்திலிருந்து 1 கிராம் தங்க தாயத்து காணமல் போனது கண்டு பிரேமாவதி அதிர்ச்சியுற்று பவித்ராவை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். பின்னர் நகர குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அதே அரசு மருத்துவமனையில் பவித்ரா கடந்த 22-11-2012 அன்று மதுராந்தகநல்லூரைச் சேர்ந்த இளவரசி என்பவரது குழந்தையின் 4 கிராம் செயினை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து பவித்ராவை கைது செய்தனர்.