நிதி முறைகேடு செய்ததாக சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் உத்திரவிட்டுள்ளார்.
சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ஜி.எம்.கணேசன். இவர் தானே புயல், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட 9 இனங்களில் ரூ.30 லட்சம் அளவிற்கு நிதி முறைகேடு செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் விசாரணை மேற்கொண்டதில் நிதி முறைகேடு செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து கணேசனை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஆட்சியரின் பதவிநீக்கம் உத்தரவை ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் வாங்க மறுத்ததால், குமாரட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், சுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் குமாரகிருஷ்ணன் முன்னிலையில் கணேசனின் பதவிநீக்க உத்தரவை, வியாழக்கிழமை அவரது வீட்டின் சுவற்றில் ஒட்டினர். மேலும் தற்காலிக தலைவராக துணைத் தலைவர் முத்துக்குமரன் செயல்படுவார் என ஆட்சியரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

