ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தூத்துக்குடியில் செவிலியர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்

தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நோயாளிகளின் நலன்கருதி செவிலியர்கள், பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய வேண்டும். 10, 20, 30 வருடம் பணி நிறைவு செய்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி

News image
Updated On :15 பிப்ரவரி 2013, 9:15 am

INBARAJ

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் 2-வது நாளாக இன்றும் பகுதி நேர பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நோயாளிகளின் நலன்கருதி செவிலியர்கள், பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய வேண்டும். 10, 20, 30 வருடம் பணி நிறைவு செய்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் வியாழக்கிழமை அரை மணி நேர பணி புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று காலை பணியை புறக்கணித்து செவிலியர்கள் மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் புதிதாக செவிலியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும், ஏற்கனவே பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மத்திய அரசு வழங்குவது போல தமிழக அரசும் செவிலியர்களுக்கு பணி சலுகைகளை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலர் மனோகரி தலைமை வகித்தார்.  செவிலியர் கண்காணிப்பாளர் ஜூடிப் அல்போன்ஸ் முன்னிலை வகித்தார்.  கிளை செயலர் உமா மகேஸ்வரி, கெளரவ ஆலோசகர் சித்தானந்தம் பிரபு,  இணைச் செயலர் செல்வம்,  நிர்வாகிகள் ஆவுடைத்தாய், ஜெனி உள்பட ஏராளமான செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.