எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கொலை வழக்கு தொடர்பாக சிதம்பரம் கல்லூரி மாணவரை பிடித்து சென்ற கர்நாடக போலீஸார்

சிதம்பரம் அயன் தெருவைச் சேர்ந்த யேசுராஜேஸ்வரன் மகன் விஷ்ணுகுமார் (17). இவர் காட்டுமன்னார்கோயிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் மாணவர் விஷ்ணுகுமார் மேலவீதியில் நடைபாதையில் உள்ள தனது தாயாரின் ரெடிமேட் கடையிக்கு இன்று

News image
Updated On :17 பிப்ரவரி 2013, 11:34 am

G.Sundararaj

கொலை வழக்கு தொடர்பாக சிதம்பரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரை கர்நாடக போலீஸார் பிடித்துச் சென்றனர்.

சிதம்பரம் அயன் தெருவைச் சேர்ந்த யேசுராஜேஸ்வரன் மகன் விஷ்ணுகுமார் (17). இவர் காட்டுமன்னார்கோயிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் மாணவர் விஷ்ணுகுமார் மேலவீதியில் நடைபாதையில் உள்ள தனது தாயாரின் ரெடிமேட் கடையிக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை வந்த போது கர்நாடக மாநிலம் தேவனஹள்ளி போலீஸார் அவரை பிடித்து டாடாசுமோவில் ஏற்றினர். அப்போது மாணவர் கூச்சல் போட்டதால் எதிரே உள்ள நகர காவல்நிலையத்தில் உள்ள பெண் போலீஸார் மாணவரை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தேவனஹள்ளியில் நடைபெற்ற கொலை வழக்கு குற்றவாளி ஒருவர் விஷ்ணுகுமாருடன் அடிக்கடை தொலைபேசியில் தொடர்பு கொண்டதை அடுத்து கர்நாடக மாநில போலீஸார் அம்மாணவரை விசாரணைக்காக பிடித்ததாக தெரிவித்தனர். பின்னர் நகர போலீஸார் அனுமதி பெற்று அம்மாணவரை விசாரணைக்காக கர்நாடக போலீஸார் அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.