எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தமிழக உரிமைகள் பறிப்புகளுக்கு மைய அரசுடன் துணை போகிறார் கருணாநிதி: அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றச்சாட்டு

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: தமிழகத்திலிருந்து கச்சத்தீவினை தாரை வார்த்தவர் கருணாநிதி. 2006-11 ஆண்ட கருணாநிதி கஜானாவை காலி செய்து, 1 கோடியே 20 லட்சம் கடனை வைத்து சென்றார். அதன்பிறகு ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா டாஸ்மாக்

News image
Updated On :17 பிப்ரவரி 2013, 9:53 am

G.Sundararaj

காவிரி நீர், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழக உரிமைகள் பறிப்புகளுக்கு மத்தியஅரசுக்கு கருணாநிதி துணை போய் வருகிறார் என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றம்சாட்டினார்.

சிதம்பரம் நகர அதிமுக சார்பில் ஜெயலலிதா 65-வது பிறந்தநாள் விழா குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தெற்குவீதி ஏ.ஆர்.மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் வரவேற்றார்.

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: தமிழகத்திலிருந்து கச்சத்தீவினை தாரை வார்த்தவர் கருணாநிதி. 2006-11 ஆண்ட கருணாநிதி கஜானாவை காலி செய்து, 1 கோடியே 20 லட்சம் கடனை வைத்து சென்றார். அதன்பிறகு ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா டாஸ்மாக் மதுபானக்கடைகளை அரசுடைமையாக்கி ஆண்டு ரூ.15 ஆயிரம் கோடி வருமானத்தை பெருக்கினார். ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறார். முதல்வர் ஜெயலலிதா அரிசி மானியமாக ரூ.4990 கோடியும், மின்வாரியத்திற்கு ரூ.3300 கோடி மானியமும், விலையில்லா மிக்சி, கிரைண்டருக்கு 2 ஆயிரம் கோடி மானியமும், தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு ரூ.780 கோடியும், மேம்படுத்தப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.750 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த  மத்தியஅரசில் அதிகார சக்தியாக அமர வேண்டும் என்பது ஜெயலலிதாவின் நோக்கமாகும். அதற்கு தமிழகத்தில் நாம் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். தமிழகம் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்பட வேண்டுமென்றால் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வெற்றியை அளித்து பிறந்தநாள் பரிசாக ஜெயலலிதாவிடம் அளிக்க உறுதி ஏற்போம் என  தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.