எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் சேத நிவாரணத் தொகை ரூ.18.22 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

கடலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் சேத நிவாரணத் தொகை வழங்க ரூ.18 கோடியே

News image
Updated On :25 பிப்ரவரி 2013, 2:58 pm

G.Sundararaj

கடலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் சேத நிவாரணத் தொகை வழங்க ரூ.18 கோடியே 22 லட்சத்து 86 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள திருநாரையூர் கிராமத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு பயிர் சேத நிவாரண தொகை மற்றும் காவிரி டெல்டா சிறப்பு கூடுதல் நிவாரணம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் 226 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கிப் பேசினார். அவர் பேசியது:  காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் 20 கிராமங்களைச் சேர்ந்த 331 விவசாயிகளுக்கும், சிதம்பரம் வட்டத்தில் 31 கிராமங்களைச் சேர்ந்த 7284 விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 51 கிராமங்களைச் சேர்ந்த 7615 விவசாயிகளின் 12152 ஏக்கர் நிலங்களுக்கும் நிவாரணத் தொகையாக ரூ.18 கோடியே 22 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் தலைமை வகித்து பேசினார். அவர் பேசியதாவது: இதுவரை கடலூர் மாவட்டத்தில் 2924 விவசாயிகளுக்கு 6 கோடியே 43 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த பிப்.23-ம் தேதி முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத் தொகை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. எஞ்சியுள்ள விவசாயிகளுக்கும் நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

விழாவில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் வி.கே.மாரிமுத்து, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வி ராமஜெயம், உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன், இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள், தனிஅலுவலர் பிருந்தா, ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.