சிறுவன் கொலையா? முரண்பாடான தகவல்களால் கொந்தளித்த ஊர் மக்கள்
ஏழுமலையின் மைத்துனர் சிலம்பரசன் என்பவர் போலீஸில் சரண் அடைந்ததாகவும், அவர் டிராக்டரில் சிறுவனை ஏற்றிச் சென்றபோது கீழே விழுந்துவிட்டதாகவும், அ


திருக்கோவிலூர் அருகே எடையூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு மகன் சேட்டு, தட்சிணாமூர்த்தி மகன் சூரியா, துரைக்கண்னு மகன் அரவிந்த் ஆகிய மூவரும் இரு தினங்களுக்கு முன்னர் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் சேட்டு 10ம் வகுப்பும், சூரியா எல்.கே.ஜி.யும், அரவிந்த் 7ம் வகுப்பும் படித்துவருகின்றனர்.
இதே ஊரைச் சேர்ந்த சின்னப்பையன் மகன் ஏழுமலை என்பவர் தனக்குச் சொந்தமான டிராக்டரில் இவர்கள் 3 பேரையும் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஓர் இடத்தில் சேட்டையும் சூரியாவையும் இறக்கிவிட்டுள்ளார்.
அரவிந்த்தை மட்டும் டிராக்டரில் வைத்து கூட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அரவிந்த் எங்கே என்று அவர்கள் வீட்டில் கேட்டபோது, மற்ற இரு சிறுவர்களும் ஏழுமலை டிராக்டரில் வைத்து கூட்டிச் சென்றார் என்று கூறியுள்ளனர்.
ஊர் மக்கள் ஒன்று கூடி ஏழுமலையைக் கேட்டபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்லியிருக்கிறார். பின்னர் ஊர்ப் பஞ்சாயத்தார் கூடி கேட்டபோது, இன்னும் 2 நாளில் தேடிக் கண்டுபிடித்து சிறுவனை ஒப்படைத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனை ஊர்ப் பஞ்சாயத்தார் ஏற்று இரு நாட்கள் அவகாசம் கொடுத்தனர். இந்த அவகாசமும் நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், நேற்று இரவு பத்து மணி அளவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுவிட்டதாகவும், இது தொடர்பாக ஒருவர் போலீஸில் சரண் அடைந்துள்ளதாகவும் செய்தி ஓடியதாம்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் திருப்பாலப்பந்தல் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீஸார், ஏழுமலையின் மைத்துனர் சிலம்பரசன் என்பவர் போலீஸில் சரண் அடைந்ததாகவும், அவர் டிராக்டரில் சிறுவனை ஏற்றிச் சென்றபோது கீழே விழுந்துவிட்டதாகவும், அதனால் பயத்தில் அவரைப் புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளார் என்று ஊர் மக்களிடம் கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த ஊர் மக்கள், பஞ்சாயத்தில் ஒருமாதிரியும், போலீஸில் ஒரு மாதிரியும் பேசியுள்ளது ஏன்? முரண்பாடான தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. வேறு ஏதோ உள்நோக்கம் உள்ளது. கிட்னி திருடர்களால் சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று வாக்குவாதம் செய்தனர். இதை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக சாலைமறியலுக்கு தயாராகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...