முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தலைமையிலான பாஜக அரசை கவிழ்க்க, அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், கர்நாடக மாநில பாஜக உயர்மட்டக்குழு கூட்டம், பெங்களூரில் நடைபெற்றது. கட்சியின் மூத்தத்தலைவர் வெங்கையாநாயுடு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர், முன்னாள் முதல்வர் சதானந்தகௌடா, துணைமுதல்வரும், மாநிலத்தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, துணைமுதல்வர் ஆர்.அசோக், தேசியபொதுச்செயலாளர் அனந்த்குமார், மேலிடப்பொறுப்பாளர் தர்மேந்திரபிரதான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.