புதுவை: பள்ளி மாணவிகளுக்கு ஓவர் கோட், சிறப்பு பேருந்து

இக்கூட்டத்தில் கல்வியமைச்சர் தி.தியாகராஜன் பேசியபோது .வீட்டைவிட அதிக நேரம் செலவழிக்கும் இடம் பள்ளி. எனவே, மாணவர்களை ஒழுங்குபடுத்த ஆசிரியர்களால் முடியும். அடிக்கடி பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி, ஒழுங்கீனத்தில் ஈடுபடும் மாணவர்களைப் பெற்றோரிடம் அடையாளம் காட்ட வேண்டும். சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டால்,
Updated on
1 min read

 புதுச்சேரியில் பள்ளி மாணவிகள் சுடிதார் சீருடையின் மீது ஓவர் கோட் அணியும் முறை அமல்படுத்தப்படும் என்றும் அவர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கல்வித்துறை அமைச்சர் தி.தியாகராஜன் கூறினார்.

புதுச்சேரியில், பள்ளி மாணவிகளுக்கு உள்ள பிரச்னைகள், அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கல்வித்துறை அமைச்சர் தி.தியாகராஜன் தலைமையில்  நடந்தது. கல்வித்துறைச் செயலர் ராகேஷ்சந்திரா, இயக்குநர் இ.வல்லவன், இணை இயக்குநர் கிருஷ்ணராஜ், அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கல்வியமைச்சர் தி.தியாகராஜன் பேசியபோது .வீட்டைவிட அதிக நேரம் செலவழிக்கும் இடம் பள்ளி. எனவே, மாணவர்களை ஒழுங்குபடுத்த ஆசிரியர்களால் முடியும். அடிக்கடி பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி, ஒழுங்கீனத்தில் ஈடுபடும் மாணவர்களைப் பெற்றோரிடம் அடையாளம் காட்ட வேண்டும். சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டால், அதை பெற்றோருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி திரும்பும் மாணவியருக்கு எனத் தனியே சிறப்புப் பேருந்துகளை அரசு இயக்கும். மாணவியருக்கான சுடிதார் சீருடையின் மீது ஓவர்கோட் அணியும் முறை இனி அமல்படுத்தப்படும். அதேபோல, மாணவ, மாணவியர் செல்போன் பயன்படுத்துவதைத் தடை செய்யவும், கண்டறியவும் சிறப்புப் படை உருவாக்கப்படும். அதேநேரத்தில், உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்தப்படும் என்றார் கல்வியமைச்சர் தி.தியாகராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com