விவசாயிகளுக்கு நிவாரணம் : ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு

தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு நிவாரணம் : ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு
Updated on
1 min read

தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிவாரணம் குறித்து ஆராய நிதியமைச்சர் தலைமையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர், கூட்டுறவுத் துறை அமைச்சர், உணவுத் துறை அமைச்சர், மீன் வளத் துறை அமைச்சர் ஆகியோரை உறுப்பினர்களாகவும், நிவாரண ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரை உறுப்பினர் செயலராகவும், தொடர்புடைய செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களை அலுவல் உறுப்பினர்களாகவும் கொண்ட ஓர் உயர் மட்டக் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

வறட்சி நிலைமை மற்றும் பயிரிழப்பு குறித்து ஆய்வு செய்து, எந்தப் பகுதிகள் வறட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்யும். இதன் அடிப்படையில், விவசாயிகள் எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாத வகையில் நியாயமான முறையில் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com