தனி தெலங்கானா: நாளை மறுநாள் முக்கிய அறிவிப்பு வெளியாகும்?
தனி தெலங்கானா பிரச்னை பற்றி தில்லியில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று(வெள்ளிக்கிழமை) பிரதமர் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் உயர்நிலை அதிகாரக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சோனியாகாந்தி தலைமை


தனி தெலங்கானா பிரச்னைக்குத் தீர்வு காண முக்கிய அறிவிப்பு வரும் செவ்வாய்க்கிழமை வெளியாகக்கூடும் என தெரிகிறது.
தனி தெலங்கானா பிரச்னை பற்றி தில்லியில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று(வெள்ளிக்கிழமை) பிரதமர் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் உயர்நிலை அதிகாரக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சோனியாகாந்தி தலைமை வகித்தார். உயர் அதிகாரக்கூழபவைச் சேர்ந்த பிரதமர் மன்மோகன்சிங், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்நாள் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்காததால் அதில் பேசிய விஷயங்கள் பற்றி அவருக்கு ஷிண்டே எடுத்துக்கூறினார்.
தனி தெலங்கானா மாநிலம் அமைக்காமல் தெலங்கானா பிராந்திய மேம்பாட்டுக்காக குழு அமைப்பது, பொருளாதார மேம்பாட்டுக்காக நிதியுதவித்திட்டம் அறிவிப்பது என்பது பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இக்கூட்டம் மீண்டும் வரும் செவ்வாய்க்கிழமை கூடி ஆலோசித்து முக்கிய அறிவிப்பை அன்றே வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...