எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாபநாசத்தில் படகு சவாரி நிறுத்தம்: மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

பாபநாசம் அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் அணைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே படகு போக்குவரத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 6:35 pm

ஷேக் அப்துல்காதர்

பாபநாசம் அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் அணைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே படகு போக்குவரத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

புலிகள் சரணாலயங்களில் சுற்றுலா செல்ல உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதை தொடர்ந்து திருநெல்வேலி  மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் மூடப்பட்டது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளுக்கு செல்ல அனுமதியில்லை. பாபநாசம் அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நிபந்தைகளுடன் புலிகள் காப்பகம் கடந்த டிசம்பர் மாதம் 7 ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகள் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பாபநாசம் அணையில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அணைப் பகுதியில் சுற்றுலா சார்ந்த தொழில் செய்து வரும் 300 குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சனிக்கிழமை மணிமுத்தாறு வந்த பி.எச். மனோஜ்பாண்டியன் எம்.பியை சந்தித்து மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து புகார் தெரிவித்தனர். தாமிரவருணி சுற்றுலாப் பயணிகள் படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் என். கோபாலகிருஷ்ணன், கே. கலான் உள்ளிட்டோர் மனோஜ்பாண்டியன் எம்.பி யிடம் கோரி்க்கை மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.