மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீஆண்டாள் பிரியாவிடை உற்சவம்: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

இன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீஆண்டாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நடைபெற்று, மாடவீதி வழியாக பெரிய பெருமாள் சன்னதியை சேர்ந்தார். அங்கு ஸ்ரீஆண்டாளுக்கு ஏகாந்தத் திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள்

News image
Updated On :6 ஜனவரி 2013, 2:27 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டு உற்சவம் திங்கள்கிழமை தொடங்குவதையொட்டி, இன்று இரவு ஸ்ரீஆண்டாள் பிரியாவிடை உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீஆண்டாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நடைபெற்று, மாடவீதி வழியாக பெரிய பெருமாள் சன்னதியை சேர்ந்தார். அங்கு ஸ்ரீஆண்டாளுக்கு ஏகாந்தத் திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் கைத்தல சேவை முடிந்து ஸ்ரீபெரிய பெருமாள் மூலஸ்தானத்திற்கு சேருதல் நடைபெற்று பின்னர் திருக்காப்பு நீக்கல் நடைபெற்றது.அரையர் வியாக்கியானம், திருப்பாவை 1-ம் பாட்டு மற்ற பாட்டுகளும் சேவித்தல் நடைபெற்று, ஸ்தலத்தார் உற்சவ வைபவம் வாசித்தல், பஞ்சாங்கம் வாசித்தல் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு நடைபெற்று, ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனமாகி மூலஸ்தானம் சேர்ந்தார்.இந் நிகழ்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.