தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பனி பொழிவால் பரவி வரும் வைரஸ் காய்ச்சல்: மக்கள் கடும் பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு நேரத்தில் கடும் பனி பொழிவு காணப்படுவதால் வைரஸ் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :6 ஜனவரி 2013, 12:54 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு நேரத்தில் கடும் பனி பொழிவு காணப்படுவதால் வைரஸ் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பரவலாக மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. நிகழ் பருவத்தில் வடகிழக்கு பருவ மழை விட்டு விட்டு பெய்து வருவதால் சூழ்நிலை மாறியுள்ளது. இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
இந்த பனிப்பொழிவு காரணமாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் சேரன்மகாதேவி பத்தமடை பகுதியில் காய்ச்சலுக்கு கர்ப்பினி பெண் உள்பட மூவர் இறக்க நேரிட்டது. இதேபோல் இம்மாவட்டத்தில் காய்ச்சலுக்கு பலர் இறந்துள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பாதிப்பினால் சிறுவர்கள் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.

கடும் பனிப்பொழிவால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பகலில் வெயில் அதிகம் காணப்படுகிறது. இதுபோன்ற காரணத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வைரஸ் காய்ச்சல் எளிதில் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால் நிலவேம்பு
குடிநீர், மலை வேம்புச் சாறு, பப்பாளிச்சாறு ஆகியன பருகலாம். நிலவேம்பு குடிநீர் பருகுவதால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

ஆகவே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளி்ல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினமும் நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும். மேலும் மருத்துவ முகாம்கள் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்து பகுதி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.