ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வந்தவரைப் பிடித்து விசாரணை

மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலை போலி பாஸ்போர்ட் மூலம் வந்திறங்கிய நபர் ஒருவரைப் பிடித்து குடியுரிமைத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

News image
Updated On :8 ஜனவரி 2013, 6:15 am

மது

மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலை போலி பாஸ்போர்ட் மூலம் வந்திறங்கிய நபர் ஒருவரைப் பிடித்து குடியுரிமைத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அப்துல் ரகிம் என்பவரின் மகன் கலிமுதீன்(49). இவர் துபாயில் சமையல் கலைஞராகப் பணிபுரிகிறாராம்.

இன்று காலை 176 பேருடம் மதுரை வந்த விமானத்தில் இவர் வந்திறங்கினார். இவரிடம் குடியுமைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், இவர் பெயர் மாற்றி பஷிரித் (த/பெ: முகமது ரஹீம்) என்ற பெயரில் வந்திருந்தது தெரியவந்தது. அவருடைய பாஸ்போர்ட் போலி என்று கண்டறிந்த குடியுரிமைத் துறை அதிகாரிகள், இவரிடம் விசாரணை மேற்கொண்டு பின்னர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.