ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி அண்ணாநகரில்


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி அண்ணாநகரில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலர் பூசைத்துரை தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் தேவசகாயம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பீட்டர், மாவட்ட துணை செயலர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் தங்க காசிராஜா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வரவேண்டும். 2002–ம் ஆண்டு முதல் தொடக்க கல்விதுறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...